Wy/ta/இந்தியப் பெருங்கடல்

< Wy | ta
Wy > ta > இந்தியப் பெருங்கடல்

இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் (Indian Ocean) உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆபிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா. ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது.

இக்கடல் அகுல்ஹஸ் முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. மடகாஸ்கர், கொமொறோஸ், சிசிலீஸ், மாலத்தீவு, மோரீஷியஸ், ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது.