Wy/ta/இலங்கை

< Wy | ta
Wy > ta > இலங்கை

இலங்கை இந்தியத் துணைக்கண்டத்தின் தென்கீழ் கரைக்கு அப்பால் இந்து சமுத்திரத்தில் ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் வாழும் ஒரு தீவு நாடு ஆகும். இதன் தற்போதைய அதிகாரபூர்வ பெயர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு ஆகும். 1972 க்கு முன் உலகம் முழுவதும் சிலோன் (Ceylon) என்ற பெயரால் அறியப்பட்டு வந்தது.

நகரங்கள்

edit

சாப்பிட

edit

இலங்கையில் பல்வேறு உணவு வகைகள் காணப்படுகின்றன. இவை மிக உருசியாக காணப்படுகின்றன. இங்கு சிங்கள, முசுலிம் மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய உணவுகள் வேறுபட்டு காணப்பட்டாலும், இலங்கையின் தேசிய உணவாக விளங்குவது நெல் அரிசிச் சோறே ஆகும்.

சிங்கள பிரதேசங்களில் முக்கிய உணவாக விளங்குவது பாற்சோறு ஆகும். இது சிங்கள மக்களின் பாரம்பரிய உணவாக விளங்குகிறது.

  • மேலும் சில சிங்கள உணவுகள்:-
    • கெவும்
    • அஸ்மி
    • அலப்பை

யாழ்ப்பாணம் உட்பட்ட தமிழ் மக்களின் பிரதேசங்களில் பாரம்பரிய உணவாக மக்கள் உண்பது சோறு ஆகும். ஆனாலும் இங்கு கொத்துரொட்டி என்ற உணவு மிகவும் பிரபல்யமாக விளங்குகிறது. இவை கோழி இறைச்சி, முட்டை, ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி மற்றும் மரக்கறியாகவும் விளங்குகின்றன.

  • மேலும் சில தமிழ் உணவுகள்:-
    • பிட்டு
    • இடியப்பம்
    • இரொட்டி
    • அப்பம்
    • வடை
    • பொங்கல்
    • பூரி
    • தோசை
    • போண்டா
    • மோதகம்
    • போலி
    • ஊத்தப்பம்

குடிக்க

edit

இலங்கையில் குழாய் நீர் குடிப்பதற்கு உகந்ததல்ல. அதிகமாக போத்தலில் அடைக்கப்பட்ட அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துங்கள். மென்பானங்கள் இங்கு அதிகமான இடங்களில் கிடைக்கின்றன.