Welcome to Wikimedia Incubator!

At the right there are some important links, and here are some tips and info:

If you have any questions, feel free to ask them on Incubator:Community Portal.

-- Welcoming Bot 11:06, 6 September 2015 (UTC)Reply

குருகுலக்கல்விமுறை edit

செல்வி.சைலஜா குமாரசாமி முனைவர்பட்ட ஆய்வாளர், அண்ணாமலைப்பல்கலைகழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம். குருகுலக்கல்விமுறை


'குருர் பிரம்மா குருர் விஷ்ணு குருர் தேவோ மஹேச்வர: குரு ஸாÑhத் பரம் பிரும்மா தஸ்மை ஸ்ரீ குரவே நம:'

'குருவே துணை', 'ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க' என்று கற்றுக்கொடுத்த பின்புதான் முன்னைய காலங்களில் சுவடிதுவக்குதல் வழக்கமாயிருந்தது. இதனை பழங்காலத்து ஏட்டுச்சுவடிகளில் எல்லாம் காணலாம். உலக வாழ்விற்கு உயிரைக்கொடுத்து உடலை வளர்ப்பவள் தாய், இவற்றிற்கு அறிவை வளர்ப்பவன் குரு ஆவான். ஆன்மீக குருவை 'சற்குரு', 'பரமகுரு', 'சுவாமி', 'சத்புருஷன்' எனப் பல பெயர் கொண்டழைப்பர். குருவின் நிலை கொண்ட இறைவன் சின்முத்திரையுடன் அமர்ந்து காட்சியளிக்கும் திருக்கோலமே தட்சணாமூர்த்தி திருவுருவமாகும். எக்கலையை கற்கவேண்டுமாயினும் குருவின் துணை கொண்டு கற்பதே சிறப்பாகும். இதனையே 'குருவில்லா வித்தை உருவில்லை' என்பர். குருவானவர் சீடனிற்கு அறிவை மட்டும் வழங்குபவர் அல்லர், அவர் ஞானத்தை புகட்டி முக்தியை அடைய வழிகாட்டுபவருமவார். குருவானவர் மிகவும் மதிக்கத்தக்கவராகவும், 'விஸ்ணுஸ்மிருதி', 'மனுஸ்மிருதி' யில் குருவை சீடனின் பெற்றோர்களிற்கு நிகராகவே போற்றுகிறது. இந்தியப்பண்பாட்டின்படி குருவை அடையாத ஒருவனை அனாதை அல்லது அதிர்ஷ்டம் அற்றவன் என்று குறிப்பிடுகின்றது. அனாதை என்பதற்கு சமஸ்கிருத மொழியில் குருவை அடையாதவன் என்பர். ஓர் குருவின் பரம்பரையானது சீடர்களின் வழியே நீட்சியடைகின்றது. குருவைப் பின்பற்றுவர்கள் சீடர்களாவர். குருவின் வழி பயின்றுவரும் சீடர்களை 'குருப்பரம்பரையினர்' என்பர். குரு என்பவர் ஆன்மீகக் கல்வியுடன் வாழ்க்கைக்கு வேண்டிய விடயங்களையும் தனது சிஷ்யைகளிற்கு வாய்மொழியாக போதிப்பவர் ஆவார். சீடர்களின் மனதில் உள்ள அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் எனும் ஒளியை ஏற்றுபவரே குரு ஆவார். பண்டைய காலங்களில் கல்வியாயினும்சரி, கலையாயினும்சரி பயில விரும்பும் மாணவர்கள் குருவின் ஆச்சிரமத்திற்குச் சென்று அவருடன் தங்கிவாழ்ந்து கல்விகற்கும் முறையே வழக்கமாயிருந்தது. இக் கல்விமுறையினை 'குரு குலக்கல்வி', 'தவளை முறைக்கல்வி' என்று அழைக்கப்பட்டது. குருவின் ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்து அவர் அருகிலேயே இருந்து கல்விபயிலும் முறை குருகுலக் கல்விமுறை என்றும், ஏதாவது ஒரு கலையை அல்லது கல்வியை பயில விரும்பும் ஒருவன் முதலில் ஒரு குருவைத் தேர்ந்தெடுத்து அவரை அணுகுவான். அக்குருவும் அவன் உண்மையில் கற்பதற்கு ஆர்வம் உள்ளவனா, அக்கல்வியை கற்பதற்கு அவனுக்குத் தகுதி உள்ளதா என்பவற்றை அறிவதற்கு சில பரீட்சைகள் வைத்து அதில் அவன் தேர்ச்சி பெற்றுவிட்டால் அவனைத் தனது குருகுலத்தில் சேர்த்துக் கொள்வார். அவனும் குருவுடனேயே தங்கியிருந்து அக்கலையை அல்லது கல்வியை பயில்வது குருகுலக் கல்வி முறை எனப்படும். இக் கல்வி முறையானது வேதகாலம் முதல் இருந்து வருகின்றது. யாக்ஞவல்கியர், வசிட்டர், வியாசர், வாருணி போன்ற மாமுனிவர்களான குருக்கள் குருகுலங்கள் நடத்தி வந்ததை உபநிடதங்கள் விரிவாக எடுத்தியம்புகின்றது. பகவத்கீதையில் குருசேத்திரம் போர்க்களத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அருச்சுணனிற்கு குருவாக இருந்து குருவின் முக்கியத்துவத்தை விளக்குகின்றார். ஞானத்தினை போதிக்கும் குருகுலத்தில் கல்விபயிலும் அனைத்து மாணவர்களிற்கும் உயர்வு தாழ்வின்றி சமமாகவே கல்வியை குரு போதிப்பார். இங்கு குறைந்தது பன்னிரண்டு ஆண்டுகளாவது கல்வியைப் பயில வேண்டும். இம்மாணவர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து குருவுடனேயே தங்கி கல்வி பயில்வர். இவர்களை 'பிரமச்சாரிகள்' என்றே அழைப்பர். இம்மாணவர்கள் பலகலைகளிலும் தேர்ச்சி பெறுவதுடன் சாஸ்திர விதிகளையும் கற்றுணர்வர். கல்வி கற்று முடிந்த சீடர்கள் குருவிற்கு பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும், குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ குருவளித்த கல்விக்காக சமர்ப்பிக்கப்படும் காணிக்கை 'குரு தட்சணை' எனப்படும். ஒரு சீடன் குருவிற்கு குருதட்சனை கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச்செல்ல சாஸ்திரங்கள் அனுமதிப்பதில்லை. குருவிடம் வித்தை கற்று 'குருதட்சணை' கொடுக்கும் முறைகளை நாம் இதிகாச, புராண கதைகளினுடாக அறியமுடிகின்றது. பகவான் ஸ்ரீகிருஸ்ணண் சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக்கல்வி கற்று முடிந்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குருதட்சணையைப் பெற மறுத்துவிட்டார். ஸ்ரீகிருஷ்ணபகவான் குருபத்தினியை அணுகி குருதட்சணையாக யாது வேண்டும் எனக்கேட்க, குருபத்தினி கண்ணீர் மல்க குருதட்சணை வேண்டாம் எனக்கூறிவிட்டார். ஸ்ரீகிருஷ்ணபகவானோ குருபத்தினியின் ஆழ்மனத்தில் இருந்த வேதனையை அறிந்து பதினைத்து ஆண்டுகளிற்கு முன்பு காணாமல் போன குருபத்தினியின் மகனை தேடிக்கண்டுபிடித்து குருவிற்கு அவரது மகனையே தட்சணையாக சமர்ப்பித்தான் என்றும், அருச்சுணணின் குருவான துரோணாச்சாரியாரின் சிலையை செய்து, அவரையே தனதுமானசீகக் குருவாகக் கொண்டு விற்கலையைப் பயின்ற வேடுவகுல இளைஞன் ஏகலைவனிடம், துரோணாச்சாரியார் அவனது வலது கை கட்டவிரலையே (பெருவிரலை) குருதட்சணையாகப் பெற்றார் என்று மகாபாரதமும் கூறிநிற்கின்றது. அதுமட்டுமல்லாது பாண்டவர்களுக்கும், கௌரவர்களிற்கும் போர்க்கலையைக் கற்றுக்கொடுத்த குருவான துரோணாச்சாரியார் தனது குருகுல நண்பனும், பின் எதிரியுமான பாஞ்சால நாட்டு மன்னன் துருபதனை போரில் வென்று அவனைத் தேர்ச்சக்கரத்தில் கட்டிக்கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு கொடுக்கும் குருதட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது துருபதனிடம் தோற்றுப்போயினர். பின்னர் பாண்டவர்கள் பாஞ்சாலம் சென்று அருச்சுணன் துருபதனுடன் போரிட்டு வென்று, துருபதனை தேர்ச்சச்கரத்தில் கட்டி, குருதுரோணாச்சாரியார் முன்புகிடத்தி அதன் வாயிலாக குருதட்சணையை சமர்ப்பித்தான் என்றும் 'குருதட்சணையின்' சிறப்பினை அறியமுடிகின்றது. முன்னைய காலங்களில் குருகுலக்கல்வி முறையில் ஆண்கலே கல்வி பயின்றமை குறிப்பிடற்பலாது. காலங்கள் செல்லச் செல்ல பெண்களும் கலைகள் பயில்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கினர். இதன் பயனாக சிஷ்யையின் இருப்பிடம்தேடி குருமார்கள் சென்று கல்வியையோ, கலையையோ போதிக்கும் நிலை ஏற்பட்டது. பெண்கள் கல்விபயில்வதும், தம் இருப்பிடத்தை விட்டு வெளியே செல்லுதல் தவறாக கருதப்பட்டமையாலும் குரு, சிஷ்யையின் இல்லம் தேடி கல்விபுகட்டிய நிலை எற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பல இன்னல்களிற்கு மத்தியில் தமது கலையின் சிறப்பு அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்;ற எண்ணத்துடனும், தமது வாழ்வாதாரத்தின் பொருளாதார நிலையின் சரிவுகாரணமாகவும் குருமார்கள் சீடர்களின் வீடுதேடிச் சென்று கற்பிக்கும் நிலை குருகுலக் கல்வி முறையின் பின் வந்த காலங்களில் நிலவியது. கலையில் ஆர்வமுள்ளவர்கள் சிறந்த குருவைத் தேர்ந்தெடுத்து அவர்களிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்து கொடுத்து தமது இல்லங்களிற்கு வரவழைத்து கற்றனர். இதன் வழியே அரச அவைகளிலும் கலைகளை வளர்க்க கலைஞர்கள் அமர்த்தப்பட்டனர். ஆலயங்களினூடாகவும், அரசவைகளிலும் வளர்க்கபட்ட கலைகள் மீண்டும் அவ்சாம்ராஜ்யம் முடிந்ததும் குருவைத் தேடி சிஷ்யர்கள் சென்று கலை பயிலும் நிலை வேரூன்றியது. கல்விமுறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமையும் ஆங்கிலேயக் கல்விமுறையும் நாளுக்கு நாள் வளர்;ச்சி கண்டு வருவதும் குறிப்பிடற்டாலது.எனினும் குருகுலக்கல்வி முறை இன்றைய கல்வி முறையில் அதிகளவில் இல்லாது இருப்பினும் அரித்வார், ரிஷிகேஷ், காசி, புனே, சென்னை, கோவை, உத்தரகாசி போன்ற இடங்களில் வேதக்கல்வி மற்றும் வேதாந்தக்கல்வி இன்றளவிலும் குருகுலக்கல்வி முறையில் போதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எந்தக் கல்வி முறையிலும் சிறப்பும், குறையும் அமைவது நாம் அறிந்ததே. கல்விமுறையில் மட்டுமன்றி இவ்வுலக வாழ்விலும் உயர்வும், தாழ்வும், ஏற்றம் இறக்கம் இருந்தவண்மே காணப்படுகின்றது. அந்த வகையில் இக்குருகுலக் கல்வி முறையின் கல்விற் சிறப்புக்களாக. 1. ஒழுங்காக ஊதியம் தரவேண்டிய தேவை இல்லை. உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே' (புற நா. 183:1...)

எனும் நன்னிலை இருந்தது. 2. ஆழமான அகலமாக அறிவு கிடைத்தது. 3.மாணவர்மீது கனிக்கவனம் செலுத்திக் குறைகளைந்து ஆசிரியர் வழிகாட்ட நிறைய வாய்ப்புக்கள் கிட்டடின. 4. குரு மாணவர் உறவு மிகச் சீரியது, வழி வழி வாழ்ந்து வந்தது. 5. குருவுடன் உடனுறைவதால் மாணவர்க்கு கலையினை கற்கும் நேரம் நிறையக்கிடைக்கின்றது. என்றும் இதன் குறைபாடுகளாக: 1. முறையான பாடத்திட்டம் ஒழுங்குறத் தொடர்ந்து பின்பற்றப்படுவதில்லை. 2. பெரும்பாலும் ஆசான் நினைத்த நாளில், நினைத்த நேரத்தில், நினைத்த பாடம் கற்பிக்கப்படும். 3. பொதுவாக மனப்பாடம் செய்தல் அதிகமிருக்கும் 4. மாணவர்கள் துணிந்து ஆய்வுக்கேள்விகள் கேட்பது குறைவு. 5. கூறியது கூறர் முறையில் பாடியது பாடல் அதிகம் பின்பற்றப்பட்டது. 6. குரு தமக்குத் தெரியாத கலையின் கூறுபாடுகளை மற்ற குருவிடம் சென்று கேட்டறியப் பெரும்பாலும் தூண்டுவதில்லை. 7. பெரிய நூலகம் சென்று படிப்பதில்லை. பண் வரலாறு, தாள வரலாறு முதலியவற்றை அறிவியல் முறையில் அணுகுவதில்லை. இவ்வாறாக குருகுலக்கல்வி முறையில் கற்ற சீடர்களிற்கு சிறப்பும், குறைபாடுகளும் நிலவியமையினை தமிழிசைக்கலைக்களஞ்சியம் எடுத்துரைக்கின்றது.1 மானசீகமாகக் கல்வி பயின்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடுகளுடன் வளர்ந்து குருவினை மதித்து கலையை பயின்றவர்களே குருகுலக் கல்விமுறையில் கற்றவர்கள். இன்றைய கலைப்பாரம்பரியத்தில் சிறப்புடன் விளங்கும் கலைஞர்கள் அன்றைய குருகுலக் கல்வி முறையில் பயின்று வந்த மேதைகளின் வழிப்பாரம்பரியங்கலே எனில் அது மிகையாகாது. இதனையே முனைவர் ஞானகுலேந்திரன் அவர்கள் 'குருசீடமுறையில்; வந்த கலைப் பரம்பரையினரே பழந்தமிழர் வளர்ந்த ஆடல் மரபையும், ஆடலோடு இணைந்த ஆடலிசை மரபையும் இன்றுவரை பக்குவமாகக் காத்து வந்த பெருந்தொகையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.3 என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

'கலாசேத்திரத்தில் ஒரு கலைக் கல்லூரி உள்ளது. அதில் நாட்டியம், இசை, ஓவியம், முதலிய கலைகள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் வெளிநாடுகளிலிருந்தும், இந்தியா முழுவதிலிருந்தும் இங்கு வந்து குருகுல முறையில் தங்கியிறுந்து கலைகளைக் கற்றுத் தேர்ந்து செல்கின்றார்கள்.2 என குருகுலக் கல்விமுறையினை மார்பு தட்டி தெரிவிக்கின்றது கலாசேத்திரம். 

அடிக்குறிப்பு 1.; - டாக்;;டர்;.வீ.ப.கா.சுந்தரம்- தமிழிசைக் கலைக்களஞச்சியம்இ தொகுதி2 --பக்கம்163. 2.; - டாக்டர்.வீ.ப.கா.சுந்தரம்- தமிழிசைக் கலைக்களஞச்சியம் தொகுதி2 பக்கம் 61. 3. டாக்கடர் ஞானாகுலேந்திரன் - பழந்தமிழர் ஆடலில் இசை- பக்கம். 06.