மதுரை தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய நகரமாகும். வைகை நதியின் கரையோரத்தில் அமைந்துள்ள இந்த நகரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பெரிய நகரமாக திகழ்கின்றது.பாண்டிய மன்னர்களாளும் ,நாயக்க மன்னர்களாளும் கட்டப்பட்ட கோவில்களுக்கு இந்நகரம் பெயர்ப்பெற்றது. "கூடல் நகரம்", "மல்லிகை மாநகரம்", "கோவில் நகரம்", :"தூங்கா நகரம்" என்றும் இந்நகரம் அழைக்கப்படுகிறது .
செல்வது எப்படி
editவிமானம் வழியாக
editமதுரை மாநகரில் ஒரு சர்வதேச விமான நிலையம் [1] அமைந்துள்ளது. சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு, கொழும்பு, துபாய், மற்றும் சிங்கப்பூர் ஆகிய நகரங்களுக்கு இங்கிருந்து விமான சேவை உள்ளது. இவ்விமான நிலையம் நகரின் மையப்பகுதியில் இருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
தொடருந்து வழியாக
editமதுரை நகரின் மத்தியில் "மதுரை சந்திப்பு தொடருந்து நிலையம் " அமைந்துள்ளது. நாட்டின் அனேக பகுதிகளுக்கும் இங்கிருந்து தொடர்வண்டி சேவை உள்ளது.
சாலை வழியாக
editமதுரை மாநகரை மாநிலத்தின் பிற பகுதிகளுடன்
- தே.நெ 44 ( ஸ்ரீநகர் - டெல்லி - பெங்களூரு - மதுரை - கன்னியாகுமரி ) ,
- தே நெ 38 ( வேலூர் - திருச்சி - மதுரை - தூத்துக்குடி ) ,
- தே.நெ 85 ( தேனி - மதுரை - ராமேஸ்வரம் )
ஆகிய தேசிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன.
பேருந்து வழியாக
editதமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் , மதுரை மாநகரில் உள்ளூர் பேருந்துகளை இயக்கி வருகிறது. மேலும் வெளியூர்களுக்கு , புறநகர மற்றும் தொலைதூர சொகுசு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. தனியார் ஆம்னி பேருந்துகளும் மதுரைக்கும் பிறநகரங்களுக்கும் இடையே இயங்குகின்றன .
மதுரை மாநகரில் 3 பேருந்து நிலையங்கள் உள்ளன
- எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் ( மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ) : இங்கிருந்து தென் மாவட்டங்கள் , சென்னை , திருச்சி, தஞ்சாவூர், விழுப்புரம் , நாகப்பட்டினம், ராமேஸ்வரம், காரைக்குடி மற்றும் பிற மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்து சேவை இயக்கப்படுகிறது .
- ஆரப்பாளையம் பேருந்து நிலையம் : இங்கிருந்து தேனி, கம்பம், திண்டுக்கல், சேலம், ஒட்டன்சத்திரம், பழனி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது
- பெரியார் பேருந்து நிலையம் : உள்ளூர் பேருந்துகளின் முனையமாக இப்பேருந்து நிலையம் செயல்படுகிறது .
பார்க்க
editகோயில்கள்
edit- மீனாட்சியம்மன் கோயில்
- கூடல் அழகர் கோயில்
- திருபரங்குன்றம்
- அழகர் கோயில்
- பழமுதிர் சோலை
மற்ற இடங்கள்
edit- திருமலை நாயக்கர் மஹால்
- காந்தி காட்சியகம்
அருகில் உள்ள இடங்கள்
edit