Wy/ta/மடிக்கேரி

< Wy | ta
Wy > ta > மடிக்கேரி

மடிக்கேரி (மெர்க்காரா) என்னும் அழகிய மலைவாசத்தலம், இந்திய மாநிலமான கர்நாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ளது. இந்த நகரம் மங்களூருக்கும் மைசூருக்கும் அருகிலுள்ளது.

மடிக்கேரி கோட்டை

சென்றடைய

edit

சாலைவழி

edit

மைசூரில் இருந்து மங்களூருக்கு செல்லும் கருநாடகத்தின் 88வது மாநில நெடுஞ்சாலையில் சென்றால் மடிக்கேரியை அடைய முடியும். மைசூரில் இருந்து இந்த சாலை வழியாக 120 கி.மீ பயணித்து மடிக்கேரியை அடையலாம். நீங்கள் மங்களூரில் இருந்து கிளம்பினால், அங்கிருந்து மேற்குறிப்பிட்ட சாலையில் 136 கி.மீ பயணித்து மடிக்கேரியை அடையலாம். பெங்களூரில் இருந்து கிளம்புவோர் பதினேழாவது மாநில நெடுஞ்சாலையான பெங்களூர்-மைசூர் பெருவழிச்சாலையில் பயணித்து, ஸ்ரீரங்கப்பட்டணாவை தாண்டியதும், 88வது மாநில நெடுஞ்சாலையில் பயணித்தும் மடிக்கேரியை அடையலாம். பெங்களூரில் இருந்து 252 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஹசன், கேரளத்தின் கண்ணனூர் (கண்ணூர்), தலைச்சேரி ஆகிய நகரங்களில் இருந்து 115 கி.மீ பயணித்தும் மடிக்கேரியை அடையலாம்.

தொடருந்து

edit

மடிக்கேரியில் தொடருந்து நிலையம் இல்லை. ஹசன், காசரகோடு, கண்ணனூர்/கண்ணூர், தலைச்சேரி ஆகிய நகரங்களுக்கு தொடர்வண்டிகளில் வந்திறங்கி, அங்கிருந்து மடிக்கேரியை அடையலாம். மைசூரிலும், மங்களூரிலும் உள்ள தொடர்வண்டி நிலையங்களுக்கு அதிக தொடருந்துகள் இயக்கப்படுவதால், அங்கு இறங்கியும் மடிக்கேரியை அடையலாம்.

வான்வழி

edit

மடிக்கேரியில் விமான நிலையம் இல்லை. மங்களூரிலும், கோழிக்கோட்டிலும், மைசூரிலும், பெங்களூரிலும் விமான நிலையங்கள் உள்ளன.

சுற்றிப் பார்க்க

edit

Wikipedia:Madikeri