கேரளா [1] இந்தியாவில் ஒரு மாநிலமாகும். பண்டைய காலத்தில் சேரர்கள் ஆண்ட நாடாகும். இது தென்னிந்தியாவில் ஒரு பகுதியாகும். இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது. மலையாளம் கேரளாவின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாக காணப்படுகினறனர். கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரம். பிற குறிப்பிடத்தக்க நகரங்கள் கொச்சி, திருச்சூர், கோட்டயம் ஆகியன. இந்திய மாநிலங்களில் கல்வியறிவு விகிதத்தில் கேரளம் முதலிடம் வகிக்கிறது.