Wy/ta/இராமேசுவரம்

< Wy | ta
Wy > ta > இராமேசுவரம்

இராமேசுவரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ஊராகும். இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் உள்ளது.

மேலிருந்து இராமநாதசுவாமி கோயில், பாம்பன் பாலம், மீன்பிடி படகுகள்

பார்க்க

edit
  • இராமநாதசுவாமி கோயில் - இக்கோயில் கடல் அருகில் கிழக்கு பகுதியில் உள்ளது. இக்கோயில் பிரமாண்டமான பிரகாரங்களைக்கொண்டது. பல அரசர்களால் பல காலங்களில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு உள்ள 22 தீர்தங்களில் நீராடினால் நன்மை பயக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.
  • அக்னி தீர்த்தம்
  • தனுஷ்கோடி (18 கிமி) 1964ஆம் ஆண்டு புயல் காற்றில் முற்றிலும் நாசமடைந்துவிட்டது.தனுஷ்கோடி பகுதியின் ஆரம்ப இடம் வரை அரசு பேருந்து செல்லும்.தனுஷ்கோடி விளிம்பினுக்கு செல்ல வேண்டும் என்றால் அங்கு இருக்கும் கூண்டு வண்டியில் (van) செல்ல வேண்டும். அங்கு சுனாமியால் இடிக்கப்பட்ட ரயில் நிலையம், கோவில் ஆகியவற்றை பார்க்கலாம். தனுஷ்கோடியின் கடைசிப்பகுதி வாழத்தகுதியற்ற இடம் என அரசால் அறிவிக்கப்பட்ட போதிலும் அங்கு 100-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர்.மேலும் இந்தியப்பெருங்கடலும்,வங்காள விரிகுடாவும் ஒன்றாக சங்கமிக்கும் அற்புதக்காட்சியை அங்கு நாம் காணலாம்.
  • ராமர் பாதம்
  • பாம்பன் பாலம் -இராமேஸ்வரம் தீவை இந்தியாவுடன் இணைக்கும் பாலமாகும்.1964-இல் வந்த சுனாமியால் இப்பாலத்தில் சென்று கொண்டிருந்த ஒரு பயணிகள் ரயில் அப்படியே அடித்துச் செல்லப்பட்டது.

அடுத்து செல்ல

edit