Wy/ta/ஹம்பி

< Wy‎ | ta
Wy > ta > ஹம்பி

ஹம்பி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் ஆகும். ஹம்பி, விஜயநகரப் பேரரசின் தலைநகரமான விஜயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விஜயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்திலேயே உள்ளது. ஹம்பி, விஜயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது. இது பழைய நகரத்தின் மையப் பகுதியில் இருப்பதனால், இதனால் இதையும் அழிந்த நகரத்தையும் ஒன்றாக எண்ணிக் குழம்பும் நிலை உள்ளது. விஜய நகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி 'என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஹம்பி விருபாட்சர் கோயில்

வந்து சேரEdit

சாலை வழியாகEdit

  • பெங்களூரு 350 கிமி

பார்க்கEdit

ஹம்பி யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக இருப்பதால் இங்கு நிறைய வெளிநாட்டினர் வருகின்றனர். இங்கு ஏகப்பட்ட இடங்கள் இருப்பதால் நன்றாக சுற்றிப்பார்க்க வழிகாட்டிகளை பயன்படுத்திக்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விஜயநகரப் பேரரசின் காலத்தில் இங்கு பல கோயில்கள் தோன்றின. பம்பபதி கோயில் (விரூபாக்சர் கோயில்), அசரா இராமர் கோயில், உக்கிர நரசிம்ம சுவாமி கோயில், விட்டலர் கோயில் என்பவற்றின் அழிபாடுகள் விஜயநகரப் பேரரசின் எச்சங்களாகக் காணப்படுகின்றன.

அடுத்து செல்லEdit

  • துங்கபத்திரை அனை மற்றும் பூங்கா
  • பர்டோலி
  • கக்காபே

Template:Geo