பேராதனை தாவரவியற் பூங்கா (Royal Botanical Gardens, Peradeniya) இலங்கையிலுள்ள மிகப் பெரிய தாவரவியற் பூங்கா ஆகும். இது இலங்கையின் சுற்றுலாத் துறையைப் பொறுத்தவரை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருப்பதுடன், நிறைந்த கல்விப் பெறுமானமும் கொண்டது. ஏராளமான உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது இருந்து வருகிறது.
சிறப்பம்சங்கள்
editஇப் பூங்காவில் இன்று ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தாவர வகைகள் உள்ளன. இங்குள்ள ஓக்கிட் பூங்கா புகழ் பெற்றது. இங்குள்ள மசாலாப் பொருள்|வாசனைத் திரவியத் தோட்டம், கற்றாழையகம், அந்தூரியம் வளர்ப்பகம் என்பன இங்குள்ள சிறப்பம்சங்களாக உள்ளன. அத்துடன் பூங்காவிலிருந்து மகாவலி ஆற்றைக் கடந்து செல்லும் தொங்கு பாலமும் இந்தப் பூங்காவின் சிறப்பம்சமாகும். பூங்காவின் அனேகமான ஓரத்தை ஒட்டிச் செல்லும் மகாவலி ஆற்றின் கரையில், பூங்காவின் எல்லைபோல் மூங்கில் மரங்கள் காணப்படுகின்றன. இலங்கைத் தீவின் வடிவில் அமைக்கப்பட்ட ஒரு குளமும் பூங்காவில் அமைந்துள்ளது.