பூம்புகார் பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன.