Wy/ta/ஆப்கானித்தான்

< Wy‎ | ta
Wy > ta > ஆப்கானித்தான்
noframe
தலைநகரம்
பணம் ஆப்கானி (AFN)
மக்கள்தொகை 31,108,077 (2013)
மின்சாரம் 220V/50Hz +/-50%
அழைப்புக் குறியீடு +93
நேர வலயம் UTC+4.5

ஆப்கானித்தான் என்பது ஆசியாக் கண்டத்தில் அமைந்துள்ள நிலத்தினால் சூழப்பட்ட மலைப்பாங்கான ஒரு நாடு ஆகும். மேற்கே ஈரான், தெற்கிலும் கிழக்கிலும் பாக்கிஸ்தான், வடக்கே துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தாஜிக்ஸ்தான், கிழக்கில் சீனா போன்ற நாடுகள் ஆகிய நாடுகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

பிரதேசங்கள்

edit

நகரங்கள்

edit
 
View of Herat from a hill in 2009.
 • கபுல் - கிழக்கில் அமைந்துள்ளது. தலைநகரம்
 • பாமியன் - ஒரு காலத்தில் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்கியது. இங்கிருந்த உயரமான கல் வேலைப்பாடுகள் தலிபனால் கலாச்சார விசமத்தின் இழிவான செயலால் அழிக்கப்பட்டது.
 • காழ்னி - தென் கிழக்கில் அமைந்துள்ளது, கபுலிற்கும், கந்தகரிக்கும் இடையில் அமைந்துள்ளது.
 • கெரத் - கிழக்கில் அமைந்துள்ளது. ஈரானிற்கான வாயிலாக விளங்குகிறது. பாரசீகத்தின் தாக்கம் காணப்படும் பல வரலாற்று சுற்றுலாத்தலங்கள் காணப்படுகின்றன.
 • சலலபாத் - கிழக்கில் அமைந்துள்ளது. கபுலிற்கும், கைப்பர் கணவாய்க்கும் இடையில் அமைந்துள்ளது.
 • கந்தகர் - தெற்கில் அமைந்துள்ளது
 • குண்டுசு - வடகிழக்கில் அமைந்துள்ள முக்கிய நகரம். தஜிகிஸ்தான் புள்ளியை கடக்கிறது.
 • மாசார்-இ சாரிப் -

வாங்க

edit

ஆப்கானித்தானின் உள்நாட்டுப் பணம் ஆப்கானி (Afghani, AFN) ஆகும். திசம்பர், 2009 இன் அடிப்படையில், ஒரு அமெரிக்க டாலர் (USD1) 48.50 ஆப்கானிக்கு (AFN48.50) சமமாகும. ஒரு இந்திய ரூபாய் (€1) 70 ஆப்கானிகளுக்கு (AFN70) சமமாக விளங்குகிறது.

 
Afghan man holding Persian silk rug in southern Afghanistan.
 
Carpets sold in Kabul. 1m sq. costs around $300

ஆப்கானித்தானில் பேரம் பேசல் கலாச்சாரத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

ஆப்கானித்தானின் அதிக பிரபலமான உற்பத்தியாக விளங்குவது தரை விரிப்புக்கள்' ஆகும். சில தரை விரிப்புக்கள்.

 • பலுச்சி விரிப்பு (Baluchi rugs)
 • தேர்கொமன் விரிப்பு (சிலவேளைகளில் போக்ஹரா, Turkoman rugs, often labelled "Bokhara")
 • ஆப்கான் விரிப்பு (Afghan rugs)

பார்க்க

edit

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களங்கள் பல ஆப்காநித்தானில் காணப்படுகின்றன. இதற்கும் மேலாக பல சுற்றுலாத்தலங்களும் காணப்படுகின்றன.

 • பாமியனின் புத்த சிற்பங்கள். - தலிபன் ஆறாம் நூற்றாண்டு சிற்பங்கள் பலவற்றை கலாச்சார குற்றத்தில் அழித்தனர்.
 • பேண்ட்-இ அமீர் தேசிய பூங்கா, ஆறு ஒன்றிணைக்கப்பட்ட ஏரிகள் இதன் நேர்த்தியான இயற்கை ஈர்ப்பை மேலும் மெருகூட்டுகின்றன. இது கடல் மட்டத்திலிருந்து 2900 தொலைவில் அமைந்துள்ளது.
 • ஜாமின் பள்ளி வாசல் தூபி ஹெரத்திற்கு வடக்கே அமைந்துள்ளது. யுனேஸ்கோவில் பட்டியலிடப்பட்டது.

மாசாரி இ சாரிப்பில் அதிகமான சிறந்த பள்ளி வாசல்கள் காணப்படுகின்றன. மற்றும் ஹெரத் போன்ற இடங்களில் பள்ளி வாசல்களை மேம்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

செய்ய

edit

சாப்பிட

edit
 
சில பிரபல ஆப்கானித்தானிய உணவுகள்.

இங்கு மூன்று வகையான பாண் காணப்படுகின்றது. அவையாவன

 • நான் (Naan) - நீளமாகவும், நீள்வட்டமாகவும் காணப்படும்.
 • ஓபி நொன் (Obi Non) - உஸ்பெக் வகை பாண். டிஸ்க் போன்ற வடிவத்தில் காணப்படும். நானை விட அடர்த்தியாக காணப்படும். வழமையாக வெள்ளை மாவில் செய்யப்படுகிறது.
 • லாவாஷ் (Lavash) - மிகவும் ஒல்லியான பாண். லாவாஷ் மாதிரியான பாண் எங்கும் கிடைக்காது. வழமையாக இறைச்சிகள் மற்றும் அவியல்களுக்கான முலாமாக பயன்படுத்தப்படுகிறது.

அரிசி உணவு வகைகளே ஆப்கானித்தானில் அரசனாக விளங்குகிறது. அரிசி உணவு வகைகள் சில:-

 • கபுலி புலோ (Kabuli Pulao or Kabuli Palaw, Qabili Palaw, Qabili Palau or simply Palau)
 • சலோ (Chalao) - வெள்ளை அரிசி. பாசுமதி மாதிரியான மிக நீளமான தானியங்கள் அவசியம்.
 • பலோ (Palao)
 • யாக்னி பலோ (Yakhni Palao)
 • சமராட் பலோ (Zamarod Palao)
 • குவோர்மா பலோ (Qorma Palao)
 • போரே பலோ (Bore Palao)
 • போஞ்சன்-இ-ரூமி பலோ (Bonjan-e-Roomi Palao)
 • செர்காஹ் பலோ (Serkah Palao)
 • செபெட் பலோ (Shebet Palao)
 • நரேஞ் பலோ (Narenj Palao)
 • மாஷ் பலோ (Maash Palao)
 • அலௌ பலௌ பலோ (Alou Balou Palao)

குவோர்மா (Qorma) என்ற உணவும் இங்கு பிரபல்யமாக விளங்குகிறது. இங்கு நூற்றிற்கும் மேற்பட்ட குவோர்மா வகைகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில:-

 • குவோர்மா அலோ-போகரா வ டல்னகோத் (Qorma Alou-Bokhara wa Dalnakhod)
 • குவோர்மா நட்றூ (Qorma Nadroo)
 • குவோர்மா லவாந்து (Qorma Lawand)
 • குவோர்மா சப்ழி (Qorma Sabzi)
 • குவோர்மா சல்கம் (Qorma Shalgham)
 
Bolani, similar to quesadilla

நொறுக்குத்தீனிகள்

 • பகலவா (Baklava)
 • ஆப்கான் கேக் (Afghan Cake)
 • கோசு பீல் (Gosh Feel)
 • பேர்னியா (Fernea)
 • மோ-ரப்பா (Mou-rubba)
 • குல்சா (Kulcha)
 • நரேஞ் பளு (Narenge Palau)

குடிக்க

edit

ஆப்கானித்தான் இசுலாமிய நாடாக மாறியதிலிருந்து மதுசார கொள்வனவு குற்றம் ஆகும். ஆனாலும், கபுலில் அமைந்துள்ள உணவு விடுதிகளில் இவற்றை பெற்றுக்கொள்ளலாம்.

நித்திரைக்கு

edit

பல உணவுவிடுதிகளும், தங்குவிடுதிகளும் ஆப்கானித்தானின் பிரதான நகரங்களில் அமைந்துள்ளன.